80,000 ஊழியர்களை பெட்டி கட்டி வீட்டிற்கு அனுப்பும் பிஎஸ்என்எல்!!

Last Modified புதன், 4 செப்டம்பர் 2019 (18:10 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பல அயிரக்கணக்கான ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவெடுத்துள்ளதாம். 
 
4ஜி இல்லாததால் தொலைத்தொடர்பு துறையில் சக நிறுவனங்களுடன் சரிக்கு சமமாக போட்டி போட முடியாததால் கடும் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல், கடந்த சில மாதமாக தனது ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் தர முடியாமல் திணறியது. 
 
இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிக ஊழியர்கள் பணியில் இருப்பதால் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை என ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளதாம். 
bsnl
அதன்படி, 70,000 - 80,000 ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க அரசிடம் பரிந்துரைத்துள்ளதாம். கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டாலும், ஒரு லட்சம் ஊழியர்கள் பணியில் இருப்பார்கள் என்றும், தேவைப்பட்டால் ஒப்பந்த முறையில் ஊழியர்கள் வேலைக்கு சேர்க்கப்படுவார்கள் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. 
 
அதேபோல், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மின்சார செலவு மட்டும் ரூ.2,700 கோடியாக உள்ள நிலையில் மின்சார பயன்பாட்டை 15% குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாம். 


இதில் மேலும் படிக்கவும் :