செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (16:35 IST)

சாமியார் சத்குருவுடன் கோல்ஃப் விளையாடிய மணிரத்னம்! வைரலாகும் புகைப்படங்கள்

சாமியார் சத்குரு இந்தியா முழுவதும் புகழ் பெற்றவர் என்றாலும் இவர் மோடியின் ஆதரவாளர் என்பதால் தமிழகத்தில் இவர் கிண்டலடிக்கப்பட்டு வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த சாமியார் சத்குருவுடன் பிரபல இயக்குனர் மணிரத்னம் ஒன்றாக இணைந்து சமீபத்தில் கோல்ஃப் விளையாடியுள்ளார்.
 
இதுகுறித்த புகைப்படங்களை மணிரத்னத்தின் மனைவியும் நடிகையுமான சுஹாசினி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முதலில் மணியின் கோல்ப் பார்ட்னர் யார் தெரியுமா? சத்குருதான் என்று ஒரு டுவீட்டை மட்டும் சுஹாசினி பதிவு செய்திருந்தார். அதன்பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இரண்டு புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.
 
மணிரத்னம் தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்க ஆரம்பகட்ட பணிகளை விறுவிறுப்புடன் செய்து வருகிறார். இந்த படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக கீர்த்தி சுரேஷ், பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யாராய், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது