செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2019 (15:55 IST)

"பொன்னியின் செல்வன்" படத்தில் இணைந்த நயன்தாரா! என்ன ரோல் தெரியுமா?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் படம் விரைவில் ஆரம்பிக்க உள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தில் ஏகப்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் இருப்பதால், பெரிய நட்சத்திரங்களை வைத்து எடுக்க மணிரத்னம் முயற்சி செய்து வருகிறார்.
 
அந்தவகையில் தமிழ் சினிமாவின் பிரபலங்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என இந்தி திரைப்பட நட்சத்திரங்களையும் வைத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை மிக பிரமாண்டமாக இயக்கவிருக்கிறார் மணிரத்னம்.  
 
வில்லி கேரக்டருக்கு ஐஸ்வர்யா ராயிடம் பேசியுள்ள மணிரத்னம், படகோட்டி பெண் பூங்குழலி கதாபாத்திரத்திற்கு நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தினதாக புதிய தகவல் வெளியாகியது.  சமுத்திர குமாரி என்னும் புனைப்பெயர் கொண்ட பூங்குழலி கதாபாத்திரம், பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில், வீரம் மிக்க பெண்ணாகவும், ராஜராஜ சோழன், வந்தியத்தேவன் போன்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு உதவி செய்யும் கதாபாத்திரம் ஆகும்.
 
எனவே இந்த கதாபாத்திரத்திற்கு நயன்தாரா நல்ல தேர்வாக இருப்பார் என்று எண்ணிய மணிரத்னம், இந்த படகோட்டி பெண் கதாபாத்திரமான "பூங்குழலி "தான் ‘பொன்னியின் செல்வன்’ கதையில்  மிக முக்கியமானது ஆதலால், தற்போது நயன் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.