செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2019 (10:19 IST)

முன்னணி இயக்குனர்கள் கலந்துகொண்ட ’ஷங்கர் 25’ – களைகட்டிய மிஷ்கின் அலுவலகம் !

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவருக்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து விழா ஒன்றை எடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் வியாபார எல்லைகளை விரிவாக்கியதில் ரஜினி, கமலுக்கு நிகரான இடம் இயக்குனர் ஷங்கருக்கு உண்டு. தமிழ் சினிமாவின் வியாபாரத்தை தனது பிரம்மாண்ட முலாம் மூலம் இந்தி வரையிலும் இப்போது உலக அளவிலும் கொண்டு சென்றவர் ஷங்கர்.

1993 ஆம் ஆண்டு வெளியான ஜெண்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஷங்கர். அதையடுத்து அவர் இயக்கிய இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன், 2.0 என அனைத்துப் படங்களும் தமிழ் சினிமாவின் ஆல் டைம் பிளாக்பஸ்டர்ஹிட்ஸ். இதனையடுத்து அவருடைய திரைவாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து இயக்குனர் மிஷ்கின் அலுவலகத்தில் அவருக்குப் பாராட்டு விழா நடந்துள்ளது.

இதில் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களான மணிரத்னம், ரஞ்சித், வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், அட்லி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.