வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 26 ஜூன் 2020 (15:44 IST)

மணிரத்தினம் கேட்டும் மகனை நடிக்க அனுமதிக்காத ஜெயம்ரவி..!

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் அடுத்தடுத்து அறிமுகமாகி தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்கின்றனர். அந்த வகையில் ஜெயம் ரவி நடித்த ‘டிக் டிக் டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஜெயம் ரவியின் மகன் ஆரவ். இந்த படத்தில்  அப்பாவுக்கு மகனாக நடித்த ஆரவ் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அந்த படத்திற்காக ஜெயம் ரவியின் மகன் ஆரவ்விற்கு சிறந்த அறிமுக குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வழங்கி கௌரவித்தது எடிசன் விருது. இந்நிலையில் ஜெயம் ரவி மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட வரலாற்று படமாக உருவாகிவரும் இப்படத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடிக்கும் ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ஒரு முக்கிய கட்சியில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவி நடிப்பதாக இருந்ததாம். ஆனால், ஜெயம் ரவி தான் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். காரணம், ஆரவ்விற்கு ஸ்கூல் எக்ஸாம் என்று இருந்ததால் அவரை நடிக்க வைக்க முடியவில்லை என்று ஜெயம் ரவி கூறியுள்ளார். மேலும் அந்த ரோலில் தற்போது  யார் நடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை என சின்ன வருத்தத்துடன் கூறினார் ஜெயம்ரவி.