செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 25 அக்டோபர் 2021 (17:30 IST)

நடிகை மீதான பாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிகை!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை ஒருவர் பாலியல் வழக்கு தொடுத்த நிலையில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
தமிழ் திரைப்பட நடிகை ஒருவர் அளித்த பாலியல் குற்றச்சாட்டு காரணமாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார் என்பதும் தற்போது அவர் ஜாமீனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் 341 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை அடையாறு அனைத்து மகளிர் போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். சட்டவிரோதமாக சிறைபிடித்த, தாக்கி காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகையோடு சேர்த்து முன்னாள் அமைச்சருக்கு எதிராக 5 பேர் வாக்குமூலம் கொடுத்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது