பல ஆண்டுகளுக்குப் பின் சினிமாவில் நடிக்கும் பாய்ஸ் மணிகண்டன்!
நடிகர் பாய்ஸ் மணிகண்டன் நீண்ட ஆண்டு இடைவெளிக்கு பின் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகர் பாய்ஸ் மணிகண்டன் பாய்ஸ் படத்தின் மூலம் ஒரே நாளில் உலகப் புகழ்பெற்றார். ஆனால் அதன் பிறகு அவருக்கு கிடைத்த படங்கள் எதுவும் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. இதனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த வாய்ப்பும் இல்லாமல் சினிமாவை விட்டே ஒதுங்கினார். இந்நிலையில் 10 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இப்போது அவர் பஹீரா படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பஹீரா படத்தில் பிரபுதேவா நடிக்கை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.