திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 29 செப்டம்பர் 2018 (10:54 IST)

செக்க சிவந்த வானம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை

செக்க சிவந்த வானம் படம் அக்டோபர் 27ம் தேதி வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதிராவ் உள்பட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
நீண்ட வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் தனது பழைய பாணில் செம் ஹிட் படத்தை கொடுத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இந்த வருடத்தில் காலா, சீமராஜாவுக்கு பிறகு 3வது மிகப்பெரிய ஓபனிங் செக்க சிவந்த வானம் படத்துக்கு கிடைத்துள்ளது. 
 
செக்க சிவந்த வானம் படம் வெளியான அன்றே நல்ல வரவேற்பையும். வசூலை வாரி குவித்தது. சென்னை நகரில் மட்டும் படம் வெளியான அன்றே 89 லட்சம் வசூல் படைத்துள்ளது. செங்கல்பட்டு, கோவை ஏரியாக்களில் முறையே ரூ.2.1 கோடி மற்றும் ரூ.1.02 கோடி வசூல் ஈட்டியதுடன், ஒட்டுமொத்தமாக தமிழகம்  முழுவதும் ரூ.7.4 கோடியை ஒரே நாளில் வசூல் ஈட்டியுள்ளது செக்க சிவந்த வானம். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.