இணையத்தில் கவனம் பெற்ற யோகி பாபுவின் மண்டேலா… இந்த எழுத்தாளரின் சிறுகதையில் இருந்துதான் உருவானதா?

Last Modified வெள்ளி, 26 மார்ச் 2021 (14:49 IST)

யோகி பாபு நடித்துள்ள மண்டேலா திரைப்படம் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ‘ஒரு இந்நாட்டு மன்னன்’ என்ற சிறுகதையை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரபல இயக்குனர் பாலாஜி மோகன் புதிதாக ஓபன் விண்டோ எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மண்டேலா எனும் புதிய படத்தைத் தயாரித்துள்ளார். இந்த படத்துக்கான பைனான்ஸை ஒய்நாட் ஸ்டூடியோஸ் நிறுவனர் சசிகாந்த் செய்துள்ளார். இந்தப்படத்தை புதுமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். பிரதானக் கதாபாத்திரமான மண்டேலா பாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்துள்ள இந்த திரைப்படம் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படம் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ஒரு இந்நாட்டு மன்னன் என்ற சிறுகதையை மையப்படுத்தி உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் வெற்றிமாறன் வரிசையாக இலக்கியங்களில் இருந்து தனது படத்தை உருவாக்கி வரும் நிலையில் இப்போது மற்ற இயக்குனர்களும் அதுபோல இலக்கியங்களை தேடி செல்ல ஆரம்பித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :