செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 26 மார்ச் 2021 (08:32 IST)

பணிகளை தொடங்கிய ஏ ஆர் ரஹ்மான்… பத்து தல படத்தின் அப்டேட்!

நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல படத்தின் இசையமைப்புப் பணிகளை ஏ ஆர் ரஹ்மான் தொடங்கியுள்ளாராம்.

நீண்ட காலமாக தனது திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து திரைப்படங்களை நடித்து வருகிறார் சிம்பு. அவரது ஈஸ்வரன் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அடுத்த படமான மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் தனது அடுத்தப்படமான பத்து தல படத்தில் பிஸியாகியுள்ளார் சிம்பு. சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். முதன்முறையாக கௌதம் கார்த்திக், சிம்பு இணையும் படம் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்துக்கு மேலும் வலுவூட்டும் வகையில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து இப்போது இந்த படத்தின் இசையமைப்புப் பணிகளை தொடங்கியுள்ளனர் இயக்குனர் கிருஷ்ணாவும், ரஹ்மானும். அதிரடி ஆக்‌ஷன் கேங்ஸ்டர் படமாக உருவாகும் பத்து தல படத்தில் மெலடி பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இசை ஆல்பம் இருக்கும் என சொல்லப்படுகிறது.