1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 9 மார்ச் 2018 (16:32 IST)

பிரபல நடிகையின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

2011ம் ஆண்டு தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் தமிழில் அறிமுகமானார். கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வளர்ந்த அவருக்கு தற்போது மார்க்கெட் டல்லாக உள்ளது. முன்பு போன்று படங்கள் இல்லாத நிலையில், ஹன்சிகா ஒல்லியாக உள்ள புகைப்படத்தை பார்த்து  ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள்தான் குண்டாக இருப்பார்கள். ஹன்சிகா என்றாலே அவர் கொழுக் மொழுக் என்று இருந்ததுதான் ரசிகர்களுக்கு  நினைவுக்கு வரும். அவருக்கு அதுதான் அழகும்கூட என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.
 
இந்நிலையில் ஹன்சிகா திடீர் என்று தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்து கஷ்டப்பட்டு குறைத்தும் விட்டார். தற்போது கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஹன்சிகா. அதில் அவர் எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி  அடைந்துள்ளனர்.
இதை பார்த்த ரசிகர்கள், ஹன்சிகா நாளுக்கு நாள் ஒல்லியாகிக் கொண்டே போகாதீங்க, பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. பழையபடி ஆகுங்க என கூறி  வருகின்றனர்.