1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 மார்ச் 2020 (11:40 IST)

ரஜினிக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட பியர் க்ரில்ஸ்: வைரல் வீடியோ!!

ரஜினி பியர் க்ரில்ஸுடன் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியின் 2 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 
டிஸ்கவரி சேனலின் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்ட். பியர் க்ரில்ஸ் என்பவர் பல நாடுகளிலும் உள்ள காடுகளுக்குள் சென்று தனி ஆளாக அங்கு கிடைப்பவற்றை உண்டு வாழ்ந்து திரும்புவதுதான் அந்த நிகழ்ச்சியின் சாரம்சம். 
 
உலகம் முழுவதும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போதைய சீசன்கள் பிரபலங்களுடன் காடுகளுக்கு செல்லும் நிகழ்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிரதமர் மோடிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். 
 
இதற்கான படப்பிடிப்பு கடந்த மாதம் பந்திப்பூர் தேசிய பூங்காவின் காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டது. அன்று முதல் ரஜினி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்களிடையே ஆவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மார்ச் 23 ஆம் தேதி ஒளிபரப்பப்படுவதாக டிஸ்கவரி சேனல் ஏற்கனவே அறிவித்தது.  
 
இதனைத்தொடர்ந்து இப்போது இந்த நிகழ்ச்சியின் 2 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு #ThalaivaOnDiscovery என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. இந்த குறிப்பிட்ட வீடியோவில் ரஜினி தண்ணீர் பிரச்சனை குறித்தும், கே.பாலசந்தர் குறித்தும், பஸ் கண்டக்டர் வேலை குறித்தும் பியர் க்ரில்ஸிடம் கூறுகிறார். 
 
அதோடு இது மிக தில்லிங்கான அனுபவம் என்றும் பேசுகிறார். இதற்கிடையில் ரஜினியின் ஷூ லேஸை பியர் க்ரில்ஸ் கட்டிவிடவும் செய்கிறார். வைரலாகும் அந்த வீடியோ இதோ...