1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (16:04 IST)

"கர்ணன்" படம் பார்த்திட்டு வெளியில் வந்ததும் தர்ம அடி வாங்கிய இளைஞர்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை படம் வெளியானது. 
 
இந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். தனுஷ் படத்துக்கு இதுவரை இல்லாத முதல் நாள் வசூல் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கடுத்த நாட்களிலும் வசூல் குறையாமல் உள்ளது.
 
இந்நிலையில் படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்த இளைஞசர் ஒருவரை தனுஷ் ரசிகர்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காரணம், அந்த நபர் படம் பார்த்துவிட்டு தனுஷ் பற்றி தவறாக பேசியதால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.