கர்ணன் படத்தைப் பாராட்டிய ஜோதிமணி எம்பி!

Last Modified செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (13:58 IST)

கர்ணன் படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் பலரும் அந்த படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை படம் வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். தனுஷ் படத்துக்கு இதுவரை இல்லாத முதல் நாள் வசூல் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கடுத்த நாட்களிலும் வசூல் குறையாமல் உள்ளது.

இந்நிலையில் படத்தை பார்த்துள்ள காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ‘ கர்ணன் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை, நியாயத்தை, வலியை, எதிர்வினையைப் பேசும் ஒரு வலிமையான படம். நெஞ்சை உலுக்கும் காட்சிகளும், குறியீடுகளும் நிறைய. அந்த உச்சந்தலை முத்தம்... சாதி எங்கிருக்கிறது என்று கேட்பவர்களை எங்கில்லை? என்று பொட்டில் அடிக்கும் படம். பாராட்டுகள் மாரி செல்வராஜ்’ எனப் பாராட்டியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :