வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2024 (10:40 IST)

கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு திடீர் திருமணமா? வைரலாகும் புகைப்படம்! - இதுதான் விஷயமா?

Kalyani Priyadarshan

பிரபல மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு திருமணமானதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

 

 

தமிழ், மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனராக அறியப்படுபவர் பிரியதர்ஷன். இவர் தமிழில் சிறைச்சாலை உள்ளிட்ட பல முக்கிய படங்களை இயக்கியவர். இவரது மகள் கல்யாணி பிரியதர்ஷன் கடந்த 2017ம் ஆண்டு வெளியான ஹலோ என்ற மலையாள படத்தில் நடிகையாக அறிமுகமானார். மலையாளத்தில் அவர் நடித்த ஹ்ருதயம் படம் பெரும் ஹிட் அடித்த நிலையில், தமிழில் சிம்புவுடன் மாநாடு, சிவகார்த்திகேயனின் ஹீரோ உள்ளிட்ட படங்களில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்தார்.

 

இந்நிலையில் தற்போது மலையாள சின்னத்திரை நடிகர் ஒருவருடன் கல்யாணி பிரியதர்ஷன் மணக்கோலத்தில் உள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. மேலும் அந்த சின்னத்திரை நடிகர் ஏற்கனவே திருமணமானவர் என்று தகவல் வெளியானதால் கல்யாணி ப்ரியதர்ஷன் ரகசிய திருமணம் செய்து கொண்டாரா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

ஆனால் அது ஒரு விளம்பரத்திற்காக படமாக்கப்பட்ட காட்சி என்பது பின்னர்தான் தெரிய வந்தது. இதனால் ரசிகர்கள் ஆசுவாசமடைந்துள்ளனர்.

 

Edit by Prasanth.K