1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (10:35 IST)

நடிகர் மம்மூட்டியின் 70வது பிறந்தநாள்! – ட்விட்டரில் ட்ரெண்டிங்!

மலையாள நடிகர் மம்மூட்டியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்த ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மம்மூட்டி. மமூக்கா என ரசிகர்களால் அழைக்கப்படும் மம்மூட்டி தமிழிலும் அழகன், தளபதி உள்ளிட்ட பல படங்களை நடித்தவர். மலையாள சினிமாவில் அதிகமான ரசிகர்களை கொண்டவர்களில் முக்கியமானவர்.

இன்று மம்மூட்டி தனது பிறந்தநாளில் 70வது வயதில் அடியெடுத்து வைக்கிறார், இந்நிலையில் அவரது பிறந்தநாளை காமன் டிபி, ஹேஷ்டேக் ட்ரெண்டிங் போன்றவற்றால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.