1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 6 செப்டம்பர் 2021 (18:54 IST)

மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாடி அசத்திய மைனா நந்தினி!

சீரியல் நடிகையான மைனா நந்தினி வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் திரைப்படங்களில் ஒரு சில குணசித்திர வேடங்களில் நடித்து வந்த மைனா நந்தினி சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் புகழ் பெற்றார். 
 
இதையடுத்து  கார்த்திகேயன் என்பவரை காதலித்து முதல் திருமணம் செய்துக்கொண்டார். அந்த வாழ்க்கையில் பிரச்சனை வர கணவன் தற்கொலை செய்துக்கொண்டார். அந்த விமர்சனங்களில் இருந்து மீண்டு வந்த அவர் சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

அவர்களுக்கு துருவன் எனும் அழகிய மகன் பிறந்தான். இந்நிலையில் மகன் பிறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது முதல் பிறந்தநாளை சீரியல் நடிகர் நடிகைகளை அழைத்து சிறப்பாக கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.