1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2023 (17:09 IST)

இந்திய அளவில் முதலிடம்.. உலக அளவில் 9வது இடம்.. ‘மாமன்னன்’ சாதனை..!

Mamannan
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் நடிப்பில் உருவான  மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகி 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. 
 
அதேபோல் சமீபத்தில் இந்த படம் ஓடிடியில் ரிலீசான நிலையில் திரையரங்கை போலவே ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்த நிலையில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் சமீபத்தில் வெளியாகி உள்ள இந்த படம் உலக அளவில் ஒன்பதாவது இடத்தையும் இந்திய அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
உலக அளவில் இந்த படத்தை இதுவரை 12 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran