மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்து பாராட்டிய கனடிய எழுத்தாளர்!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழுவினரே அறிவித்துள்ளனர். இந்த படத்தில் வடிவேலு நடித்திருந்த மாமன்னன் கதாபாத்திரம் வெகுவாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து இப்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வெளியான சில நாட்களிலேயே நெட்ஃபிளிக்ஸ் ட்ரண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில் கனடிய வாழ் இலங்கை எழுத்தாளரான அ முத்துலிங்கம் மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார். அதில் “வணக்கம் மாரி, இன்று நெட்பிளிக்ஸில் மாமன்னன் திரைப்படம் பார்த்தேன். சொல்ல வந்த விஷயத்தை அழுத்தமாக சொல்லி இருக்கிறீர்கள். கதை காத்திரமானது. எப்படி முயன்றாலும் தோல்வியாக முடியாது. வரவர உயரத்தைக் கூட்டிக்கொண்டே போகிறீர்கள். அடுத்த படம் எடுப்பதை நீங்களே உங்களுக்கு சிரமம் ஆக்கிக் கொள்கிறீர்கள். மனம் மகிழ்ச்சியில் இருக்கிறது. ஒரு நல்ல படம் பார்த்த நிறைவு. வாழ்க” என வாழ்த்தியுள்ளார்.