1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (21:51 IST)

உதயநிதியின் படத்தை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்..

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில்,  உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  நடிப்பில் சமீபத்தில் தியேட்டரில் வெளியான படம் மாமன்னன். இத்திரைப்படம் வெளியாகி  ரசிகர்களின் வரவேற்பை பெற்று, வசூலிலும் ரூ 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழுவினரே அறிவித்தனர்.

இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து இப்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது . இப்படம் ஓட்டியில்  வெளியான சில நாட்களிலேயே நெட்ஃபிளிக்ஸ் ட்ரண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இந்த  நிலையில், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் லியோ பட ஷூட்டிங்கை முடித்த நிலையில், இன்று  மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.

இப்படம் எல்லா துறைகளிலும் சிறப்பாக உள்ளது என்று கூறி இயக்குனர் மாரி செல்வரராஜ்,  உதயநிதி, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட மொத்த படக்குழுவினரையும்  தன் டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.