திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 29 மே 2021 (11:11 IST)

மலேசியா டூ அம்னீசியா… குவியும் பாசிட்டிவ் விமர்சனங்கள்

ஜி 5 ஓடிடியில் வெளியாகியிருக்கும் மலேஷியா டு அம்னீசியா என்ற திரைப்படம் நகைச்சுவையால் ஈர்ப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராதாமோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த பொம்மை திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் ZEE  5 ஸ்ட்ரீமிங் தளத்துக்காக ராதாமோகன் ஒரு படத்தை இயக்கி வருகிறார். முழு நீள காமெடி படமான இதில் வைபவ்வும் பிரியா பவானி சங்கரும் நடிக்கின்றனர். மற்ற கதாபாத்திரங்களில், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன்,  மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படம் வெளியாகி சில நாட்கள் ஆகியுள்ள நிலையில் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கள்ளக்காதலியை சந்திக்க மலேசியா செல்வதாக கதாநாயகன் பொய் சொல்கிறான். ஆனால் அவன் செல்வதாக சொன்ன விமானம் விபத்துக்குள்ளாகி விடுகிறது. இதனால் வீட்டுக்கு திரும்பும் கதாநாயகன் தனக்கு எல்லாம் மறந்துவிட்டதாக கூறுகிறார். கதாநாயகியின் மாமாவான எம் எஸ் பாஸ்கர், இதன் பின்னுள்ள உண்மையானக் காரணத்தை துப்பறிய கிளம்புகிறார். இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை. வழக்கமான ராதாமோகனின் ட்ரேட் மார்க் நகைச்சுவை காட்சிகள் கொண்ட இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.