வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 9 மே 2017 (11:07 IST)

மலையாள ‘லட்டு’ தயாரிப்பில் இறங்கிய நடிகர் தனுஷ்!

தனுஷ் கோலிவுட்டில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர் என தனக்கென ஒரு ஹிட் ஃபார்முலா வைத்து  வலம் வருபவர். தற்போது வினய் போர்ட், பாலு வர்கீஸ், சபரீஷ் வர்மா, சஜு நவோதயா உள்ளிட்டோரை வைத்து அருண் கே டேவிட் எடுத்து வரும் மலையாள படம் லட்டு. லட்டு படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார் தனுஷ்.

 
2013-ஆம் ஆண்டு மம்மூட்டி, திலீப் நடிப்பில் வெளியான ‘கமத் & கமத்’ படத்தில் கெஸ்ட் ரோலில் வந்தார் தனுஷ். இதனைத்  தொடர்ந்து டோவினோ தாமஸின் பெயரிடப்படாத புதிய மலையாள படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை அருண்  டொமினிக் என்பவர் இயக்கி வருகிறார். கோலிவுட்டை அடுத்து மல்லுவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார் தனுஷ்.
 
முன்னதாக மம்மூட்டி, திலீப் நடிப்பில் வெளியான காமத் அன்ட் காமத் படத்தில் தனுஷ் கவுரவத் தோற்றத்தில் நடித்தார். ஒரு  பாடலுக்கு மம்மூட்டியுடன் சேர்ந்து ஆடினார்.