திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 ஜூலை 2022 (15:30 IST)

பிரபல இளம் மலையாள நடிகர் தற்கொலை! – சிக்கிய தற்கொலை கடிதம்!

Sarath Chandran
மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்த இளம் நடிகரான சரத் சந்திரன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் அங்கமாலி டைரிஸ், சிஐஏ, மெக்சிகன் அபராதா, கூடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தவர் இளம் நடிகர் சரத் சந்திரன். திரைப்படங்கள் தவிர்த்து விளம்பர படங்கள் பலவற்றிலும் கூட இவர் நடித்துள்ளார்.

37 வயதாகும் சரத் சந்திரன் தன் தாய் மற்றும் சகோதரனுடன் மலப்புரம் மாவட்டம் கக்காடு பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடம் விரைந்த போலீஸார் அங்கு ஒரு கடிதத்தை கண்டெடுத்துள்ளனர். அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணமல்ல என்றும், மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் பிரபலமான நடிகராக உயர்ந்து வந்த சரத் சந்திரன் திடீரென தற்கொலை செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.