நீண்ட இழுபறிக்குப் பின் அருண் விஜய்யின் ‘பார்டர்’ ரிலீஸ்… பண்டிகை நாளில் வெளியிட திட்டம்!
நடிகர் அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கிய பார்டர் திரைப்படம் கடந்த ஆண்டே முடிந்த நிலையில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கி வரும் திரைப்படம் “பார்டர்”. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். குற்றம் 23 படத்தை தொடர்ந்து அருண் விஜய் – அறிவழகன் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகும் படம் இந்த “பார்டர்”. இதில் அருண் விஜய் ராணுவ வீரராக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் தயாராகி பல மாதங்கள் ஆன நிலையில் கொரோனா மற்றும் வேறு சில காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.
இந்நிலையில் இப்போது ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிகிறது. அந்த தேதியில் ரிலீஸ் ஆக இருந்த கார்த்தியின் விருமன் ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு சென்றுள்ளதால் இப்போது அந்த நாளில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதே நாளில் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.