கொரோனாவுக்கு முன்ன நான் ரொம்ப பிஸி… ஆனால் இப்போ – தனுஷ் படத்தில் நடிக்க சம்மதித்தன் காரணம்!

Last Modified வெள்ளி, 20 நவம்பர் 2020 (15:18 IST)

நடிகை மாளவிகா மோகனன் தனுஷ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் D 43 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தில் நாயகியாக நடிக்க மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தனுஷின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மாளவிகா ‘உங்களுடன் பணிபுரிய மிகவும் ஆவலாக இருக்கிறேன் ( நம் இருவரையும் விரைவில் யாராவது ஒரே படத்தில் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன்)’ எனக் கூறியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த தனுஷ் ‘நானும் ஆவலாக இருக்கிறேன்’ எனக் கூறி இருந்தார். இந்நிலையில் இப்போது கார்த்திக் நரேன் தனுஷ் நடிக்கும் படத்துக்கு கதாநாயகி தேடும் படலத்தில் இருக்க, அந்த வாய்ப்பு மாளவிகா மோகனனுக்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் இணைந்தது குறித்து மாளவிகா மோகனன் பேசியுள்ளார். அதில் ‘இந்த படத்தில் நடிக்க என்னைக் கொரோனா லாக்டவுனுக்கு முன்னரே அனுகினர். ஆனால் அப்போது நான் மூன்று படங்களில் நடித்துக்கொண்டு இருந்ததால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. இப்போது கொரோனா காரணமாக என் படங்களின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தள்ளிப் போயுள்ளன. இதனால் படக்குழு என்னை அனுகிய போது உடனே ஓகே சொல்லிவிட்டேன்’ எனக் கூறியுள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :