செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 14 மே 2019 (13:32 IST)

"இந்த அடக்கம் போதுமா" ரசிகருக்கு புகைப்படத்துடன் பதிலடி கொடுத்த பேட்ட நடிகை!

ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.  


 
இப்படத்தில்  சசிகுமாரின் ஜோடியாக நடித்திருந்தவர்  நடிகை மாளவிகா மோகனன். மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி என ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பல படங்களில் நடித்துள்ளார்.
 
பிறகு தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்த இவர் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார்  ரஜினியுடன் களம் இறங்கி அசத்தினார்.    சமூக வலைதளத்தில் கவர்ச்சிக்கு அளவில்லாமல் இருந்து வரும் மாளவிகாவிடம் சமீபத்தில் ரசிகர் ஒருவர் ’கொஞ்சம் அடக்கமான பெண்ணை போல ஆடை அணியுங்கள் ‘என்று கமெண்ட் செய்திருந்தார். 
 

இந்நிலையில் தற்போது அந்த ரசிகருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக படு மோசமான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.  இந்த புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.