செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஜூலை 2020 (09:41 IST)

வலிமை தயாரிப்பாளர் வெளியிட்ட ரிலீஸ் தேதி! ரசிகர்கள் உற்சாகம்!

வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வரும் மைதான் படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 13 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தமிழில் தயாரிப்பாளராக அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை மூலமாக கால் பதித்தார். அதையடுத்து அவர்களது கூட்டணியில் இரண்டாவது படமாக தற்போது வலிமை உருவாகி வருகிறார். பொது முடக்கம் காரணமாக தற்போது பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் போனி கபூர் இந்தியில் தயாரித்து வந்த மைதான் என்ற படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கால்பந்து ஜாம்பவான் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.