கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் கலக்கும் குண்டூர் காரம்!
மகேஷ் பாபு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சர்காரு வாரிபட்டா. இந்த படம் சரியாக போகாத நிலையில் இப்போது குண்டூர் காரம் என்ற படத்தில் மகேஷ் பாபு நடித்து வருகிறார். இந்த படத்தை அலா வைகுந்தபுரம்லூ படத்தை இயக்கிய திரிவிக்ரம் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
ஸ்ரீலீலா, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயராம் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்க, இந்த படம் ஜனவரி 12 ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாள் வசூல் அதிரிபுதிரியாக அமைந்துள்ளது.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும் இந்த படம் 45 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாம். வார நாளில் இவ்வாளவு பெரிய கலெக்ஷனோடு ஓப்பனிங்கை தொடங்கியுள்ள குண்டூர் காரம் வரும் நாட்களில் இன்னும் அதிக வசூல் செய்யும் என சொல்லப்படுகிறது.