வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2024 (14:51 IST)

தனது 4 வயது குழந்தையை கொன்ற பிரபல நிறுவனத்தின் CEO கைது!

suchana
விவாகரத்திற்கு பின் தனது  4 வயது குழந்தையை கொன்ற  தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Mindfull Al Lab என்ற நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருப்பவர் சுச்சனா. இவர் தனது கணவரை விவகாரத்து செய்த நிலையில், தன் மகனுடன் வாழ்ந்து வந்தார்.

இந்த  நிலையில், விவாகரத்திற்கு பின் தன் மகனுடன் கணவர் சந்தித்து வருவதை இவரால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில், தந்தை- மகன் சந்திப்பை தடுக்க வேண்டி, தனது 4 வயது மகனை கொடூரமாக கொன்று சடலத்தை பையில் வைத்து கோவாயில் இருந்து பெங்களூரு எடுத்துச் சென்றுள்ளார் தாய் சுச்சனா.

இதையடுத்து, கோவாவில் சுச்சனா தங்கியிருந்த அறையில் இருந்த ரத்தக் கறையை கண்ட விடுதி பணியாளர் போலீஸாருக்கு தகவல் அளித்த  நிலையில், அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.