1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 19 செப்டம்பர் 2018 (17:53 IST)

இது எப்போ? லிஃப்ட்டில் லிப் டூ லிப் கொடுக்கும் மகத்...

நடிகை பியா பாஜ்பாய்க்கு நடிகர் மகத் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
பிக்பாஸ் வீட்டிற்கு சென்று ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகா ஆனந்தின் பேச்சைக்கேட்டு மும்தாஜ் உட்பட பலருடன் சண்டை போட்டு ரெட் கார்டு வாங்கி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் நடிகர் மகத். பிக்பாஸ் வீட்டில் இருந்த போதே பெண்கள் சூழ பிளே பாயாக மஹத் வலம் வந்தார். இது எல்லோருக்கும் தெரியும். அவரின் காதலி வெளியே அவருக்காக காத்திருக்க, தான் யாஷிகாவை காதலிப்பதாக கூறி அவருக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
 
ஆனால், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின், காதலியை மகத் சமாதானப்படுத்தி விட்டதாக செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், லிஃப்ட்டில் நடிகை பிஜா பாய்க்கு மகத் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இது எப்போ? என நாம் கேள்வி எழுப்ப, இது 2013ம் ஆண்டு மகத் நடித்த தெலுங்கு படமான பேக் பெஞ்ச் ஸ்டூடண்ட் என்ற படத்தில் இடம் பெற்ற காட்சி என்பது தெரியவந்துள்ளது. 
 
இந்த புகைப்படத்தைத்தான் யாரோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ செய்துள்ளார் எனத் தெரிகிறது.