திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (09:28 IST)

பிக்பாஸ் நாமினேஷன்: 2 வயசு மும்தாஜூம், 12 வயசு ஐஸ்வர்யாவும்

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று எதிர்பார்த்தது போலவே வைஷ்ணவி வெளியேற்றப்பட்டார். தற்போது வீட்டில் உள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை ஒன்பது மட்டுமே உள்ளது. 60 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டதால் இனிமேல் வைல்ட்கார்ட் எண்ட்ரி இருக்குமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
 
இந்த நிலையில் இன்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராஸஸ் குறித்த புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த முறை ஜோடி ஜோடியாக சேர்ந்து நாமினேஷன் செய்கின்றனர்.
 
அந்த வகையில் ஐஸ்வர்யாவை மும்தாஜ் நாமினேஷன் செய்கிறார். ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகள் 12 வயது சிறுமி போல் இருப்பதாகவும் அவருக்கு மெச்சூரிட்டி இல்லாததாலும் நாமினேட் செய்வதாக கூறுகிறார். அதேபோல் ஐஸ்வர்யா, மும்தாஜ் 2 வயது குழந்தை போல் இருப்பதாகவும் அதனால் அவரை நாமினேட் செய்வதாகவும் கூறுகின்றார்.
 
மேலும் மகத், செண்ட்ராயன், டேனியல் ஆகியோர்களும் மும்தாஜை நாமினேட் செய்வது போல் தெரிகிறது. எனவே இந்த வார நாமினேஷனில் மும்தாஜ் உறுதி என்பது தெரிகிறது.. அதே நேரத்தில் பார்வையாளர்கள் ஐஸ்வர்யா மீது செம கோபத்தில் இருப்பதால் அவர் நாமினேட் ஆனால் வெளியேறுவது நிச்சயம் என்றும் கருதப்படுகிறது.