வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 18 ஆகஸ்ட் 2018 (10:47 IST)

வெளிய போறவங்க போங்க: கமலின் ஆவேசத்தால் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் வரும் சனி மற்றும் ஞாயிறு மட்டும் ஓரளவு பார்க்கும்படி இருக்கும் நிலையில் உள்ளது. கமல் முன் மட்டும் போட்டியாளர்கள் அனைவரும் சாந்த சொரூபிகளாக நடிப்பார்கள். ஆனால் திங்கள் முதல் கோரத்தாண்டவம் ஆடுவார்கள். குறிப்பாக ஐஸ்வர்யாவின் ஆட்டம் கொஞ்சம் ஓவராகவே இருந்து வருகிறது.
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் கமல் முன்னிலையில் ஐஸ்வர்யா பயங்கர ஆத்திரத்துடன் கத்துகிறார். மகத்திடமும் மும்தாஜிடம் அவர் போடும் சண்டையால் கமல்ஹாசனே அதிர்ந்து ஒரு துர்கா பூஜையே அங்கு நடக்கின்றது என்று கூறுகின்றார்
 
பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு தான் வெளியேற விரும்புவதாக ஐஸ்வர்யா கூற, 'இப்படி படம் காண்பித்து கொண்டிருக்க கூடாது, ஐந்து நிமிடம் கதவை திறந்து வைக்கின்றேன். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்ல விரும்புபவர்கள் தாராளமாக போகலாம்' என்று கூற உடனே ஐஸ்வர்யா எழுந்து நான் செல்கிறேன் என்று கூறுகிறார். 
 
ஆனால் கடந்த 60 நாட்களாக புரமோ வீடியோவை பார்த்து ஏமாந்து இருக்கும் பார்வையாளர்கள் இன்று ஐஸ்வர்யா வெளியேறுவார் என்பதை நம்பத்தயாராக இல்லை.