புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (17:12 IST)

தீபாவளிக்கு வருகிறது விக்ரம்மின் மஹான் திரைப்படம் ! சர்ப்ரைஸ் அப்டேட்!

நடிகர்கள் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடித்துள்ள மஹான் திரைப்படம் தீபாவளி ரிலீஸுக்கு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

தீபாவளி ரேஸில் முதலில் இணைந்த அண்ணாத்த திரைப்படம் இப்போது உலக மார்க்கெட்டைக் கணக்கில் கொண்டு பொங்கலுக்கு தள்ளிப் போகலாம் என்ற முடிவில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி ஒரு வேளை அண்ணாத்த தள்ளிப்போனால் தங்கள் படமான மஹானை தீபாவளிக்கு கொண்டுவரலாம் என்ற முடிவில் உள்ளதாம் அந்த படக்குழு.

ஏற்கனவே மாநாடு மற்றும் வா டீல் ஆகிய படங்களும் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.