1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (13:35 IST)

மீண்டும் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸுக்கு படம் இயக்கும் அருவி இயக்குனர்!

அருவி படம் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் அருண் பிரபு புருசோத்தமன்.

அருவி படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் அருண் பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படம் வாழ். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்தார். இந்த படம் சோனி லைவ் நிறுவனம் ஜூலை 16 ஆம் தேதி ரிலிஸ் ஆனது. ஆனால் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் இப்போது அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தை அருவி படத்தைத் தயாரித்த எஸ் ஆர் பிரபுவே தயாரிக்க உள்ளாராம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.