1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (14:08 IST)

எஸ் பி பி க்கு விரைவில் மணிமண்டபம்… எஸ் பி சரண் அறிவிப்பு!

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் சில தினங்களுக்கு முன்னர் அனுசரிக்கப்படுகிறது.

தமிழின் முன்னணி பாடகரும் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவருமான எஸ் பி பாலசுப்ரமண்யம்  கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் தீரா துயரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவரின் இறப்பு நடந்து ஒரு ஆண்டு ஆகி விட்ட நிலையில் விரைவில் அவருக்கு சென்னையில் மணிமண்டபம் கட்டப்படும் என அவரின் மகனும் பாடகருமான எஸ் பி சரண் அறிவித்துள்ளார்.