1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Hollywood stunt director guy Norris joined Ramayana movie

இராமாயணம் படத்தில் இணைந்த ‘மேட் மேக்ஸ்’ ஸ்டண்ட் கலைஞர்!

KGF
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மூன்று பாகங்களாக உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும்  ராவணன் வேடத்தில் கேஜிஎஃப் புகழ் யாஷும் நடிக்க, அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.  இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் ரன்பீர் கபூர் மற்றும் சாய்பல்லவி ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இப்பொது யாஷ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை படமாக்க ஹாலிவுட் ஸ்டண்ட் இய்ககுனர் கய் நோரிஸ் படக்குழுவுடம் இணைந்துள்ளார். இவர் மேட் மேக்ஸ் உள்ளிட்ட பல ஆக்‌ஷன் படங்களுக்கு சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். ராமாயணம் முதல் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளிக்கும் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக ‘கராத்தே பாபு’ இருக்கும்- ரவி மோகன் நம்பிக்கை!