வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2023 (20:38 IST)

’லியோ’ பட விமர்சனம் பற்றி மடோனா செபஸ்டியன் விமர்சனம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.  இவர், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் லியோ.  இப்படத்தை  லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைப்பில், 7 ஸ்கீரின் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள  இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸானது. இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய்யின் லியோ படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழழுவதும் ரூ.400 கோடி வசூலித்துள்ளதாக்ல Comscore  என்ற நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  காதலும் கடந்து போகும், கவண், வானம் கொட்டட்டும், கொம்பு வைச்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களில் நடித்த மடோனா செபாஸ்டியன் லியோ படத்தில், விஜய்யின் தங்கையாக நடித்திருந்தார்.

இப்படத்தில் நடித்தது குறித்து அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பெரிய ஸ்டார், பெரிய டீம் என்பதால் இப்படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டேன்.  இந்த படத்தில் எலிசாவாக நான் சில காட்சிகளில் மட்டுமே நடித்தேன்.  மடோனாவாக நடிக்கவில்லை என்று விமர்சிக்கின்றனர்.

எனக்குக் கொடுத்த வேலையை நன்றாகச் செய்ய வேண்டும என நினைத்துச் செய்தேன்.எந்தக் கதாப்பாத்திரம் என்றாலும் 100  சதவீதம் உழைப்பைக் கொடுத்தால் போதும்…என்று தெரிவித்துள்ளார்.