1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (16:28 IST)

இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: பிரபல நடிகரின் டுவீட்!

இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்:
இனிமேல் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க வேண்டும் என்றால் மரம் ஏற வேண்டாம் என்றும் தரையில் நின்று கொண்டே தேங்காய் பறிக்கலாம் என்றும் நடிகர் மாதவன் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்
 
மாதவன் தனது தென்னந்தோப்பில் வளர்த்துள்ள வித்தியாசமான தென்னை மரங்கள் 6 அடி முதல் ஏழு அடி உயரம் மட்டுமே உள்ளன. மிகவும் உயரம் குறைந்த இந்த தென்னை மரத்தில் கொத்து கொத்தாக தேங்காய்கள் காய்த்து தொங்கும் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்
 
இந்த தென்னை மரங்களை வளர்ப்பது எப்படி என்பது குறித்து விரைவில் தான் ஒரு அறிக்கை வெளியிட உள்ளதாகவும் அந்த அறிவிப்பு உள்ளூர் தென்னை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் மாதவன் தனது டுவீட்டில் தெரிவித்துள்ளார்.