செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2020 (15:22 IST)

எப்படி சார் இந்த படத்தைப் போய் ஒத்துக் கொண்டீர்கள் – மாதவனிடம் ஆதங்கப்பட்ட ரசிகர்!

நடிகர் மாதவன் நடித்துள்ள சைலன்ஸ் திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில் அது குறித்து மாதவன் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ஓடிடியில் வெளியாகும் படங்கள் எல்லாம் மொக்கையாகதான் இருக்கும் என்பதை நிரூபிக்கும் விதமாக மற்றுமொரு படமாக வெளியாகியுள்ளது சைலன்ஸ். இந்த படம் வெளியானதில் இருந்து எல்லாப் பக்கங்களில் இருந்தும் மோசமான விமர்சனங்களே வெளியாகிக் கொண்டு உள்ளன. இந்நிலையில் சமூகவலைதளத்தில் நேரடியாக நடிகர் மாதவன் உரையாடினார்.

அப்போது ஒரு ரசிகர் ’இந்த படத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்? உங்களுக்குக் கதை பிடித்திருந்ததா ? எங்களுக்கு படம் அபத்தமாக இருந்ததாக தோன்றுகிறது.  உங்களது கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.’ எனக் கேட்டிருந்தார்.  அவருக்கு பதிலளித்த மாதவன் ‘சில சமயம் நமக்கு வெற்றிக் கிடைக்கும். சில சமயம் தோல்வி கிடைக்கும். நாங்கள் எங்களால் தர முடிந்த சிறந்ததை தருகிறோம்’ எனக் கூறியுள்ளார்.