1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : புதன், 3 ஜனவரி 2018 (13:59 IST)

மாதவனின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?

மாதவன் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற தகவல் கிடைத்துள்ளது. தமிழில் இருந்து பாலிவுட்டுக்குப் போன மாதவன், சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் தமிழில் ரீஎண்ட்ரி ஆனார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. அதன்பிறகு புஷ்கர் - காயத்ரி இயக்கிய ‘விக்ரம் வேதா’ படத்தில் போலீஸாக நடித்தார். விஜய் சேதுபதியுடன் அவர் இணைந்து நடித்த இந்தப் படமும் சூப்பர் ஹிட்.
 
மும்பையில் வசித்துவரும் மாதவன், ஒரு கதையைக் கேட்டு 100 சதவீதம் திருப்தியான பிறகே நடிக்க ஓகே சொல்கிறார். ‘இறுதிச்சுற்று’ வெற்றிக்குப் பிறகு ஏகப்பட்ட பேர் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க அணுகினர். ஆனால், அவர் ‘விக்ரம் வேதா’வை மட்டுமே தேர்வு செய்தார்.
 
இந்நிலையில், ‘களவாணி’ படத்தை இயக்கிய சற்குணம் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார் மாதவன். ‘நய்யாண்டி’ படத்துக்குப் பிறகு பல வருடங்கள் கழித்து இந்தப் படத்தை இயக்க இருக்கிறார் சற்குணம். காமன் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது.