திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By C.M.
Last Updated : புதன், 3 ஜனவரி 2018 (23:13 IST)

மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா : நடிகர் - நடிகைகள் இன்று பயணம்

மலேசியாவில் நடைபெறும் நட்சத்திரக் கலைவிழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் - நடிகைகள் இன்று இரவு மலேசியா  செல்கின்றனர்.
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக, வருகிற ஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா நடைபெற இருக்கிறது. புக்கட் ஜலீல் இண்டோர் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்தக் கலைவிழாவில், கலைநிகழ்ச்சிகள் மட்டுமின்றி நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டுகளும் நடைபெற உள்ளன.
 
இந்தக் கலைவிழாவில், ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவரும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு, நடிகர் சங்கத் தலைவர் நாசரே நேரில் சென்று அழைப்பு விடுத்ததாகவும், அவர்களும் வர ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த விழாவுக்காக, 5 மற்றும் 6ஆம் தேதி படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விழா ஏற்பாட்டைக் கவனிப்பதற்காகவும், கலைநிகழ்ச்சி ரிகர்சலுக்காகவும் இன்று இரவு நடிகர் - நடிகைகள் மலேசியா புறப்பட்டுச் செல்கின்றனர்.