1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (20:47 IST)

ராக்கெட்டரி நஷ்டத்தால் சொந்த வீட்டை விற்றுவிட்டாரா மாதவன்?

rocketery
மாதவன் நடித்த ராக்கெட்டரி  என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றாலும் அந்த படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வசூல் செய்யவில்லை என்று கூறப்பட்டது
 
இந்த நிலையில் நெட்டிசன்கள் சிலர் மாதவனுக்கு ராக்கெட்டரி படத்தால் நஷ்டம் என்றும், அவர் தன்னுடைய சொந்த வீட்டை விற்று விட்டார் என்று செய்திகளை பரப்பினர்
 
 இந்த செய்திக்கு பதில் அளித்துள்ள மாதவன் நான் சொந்த வீட்டை விற்க வில்லை என்றும் நான் என்னுடைய வீட்டில் தான் தற்போது இருக்கிறேன் என்றும் கூறினார் 
 
மேலும் ராக்கெட்டரி  படத்தால் நாங்கள் நல்ல லாபத்தை பெற்று உள்ளோம் என்றும் இந்த ஆண்டு வருமான வரியை நாங்கள் அதிகம் கட்டுவோம் என்று மாதவன் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து ராக்கெட்டரி  விமர்சனத்தில் மட்டுமின்றி வசூலிலும் வெற்றிகரமாக படம் என்பது தெரியவந்துள்ளது