செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 6 ஜூலை 2022 (15:24 IST)

சூர்யா இந்தியன் இல்லையா? பிரபல நடிகை கேள்வி!

surya
நடிகர் சூர்யா இந்தியன் இல்லையா? அவர் ஏன் ஜெய்ஹிந்த் சொல்லவில்லை? என நடிகை ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
சமீபத்தில் வெளியான மாதவன் இயக்கத்தில் உருவான ’ராக்கெட்டரி’ படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதே கேரக்டரில் நடித்த மற்ற மொழி நடிகர்கள் ஜெய் ஹிந்த் என்று கூறிய நிலையில் சூர்யா மற்றும் ஜெய்ஹிந்த் என்று கூறவில்லை என நடிகையும் அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
ராக்கெட்டரி படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.. அதேபோன்று மற்ற மொழிகளிலும் அதே வேடத்தில் பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். மற்ற மொழியில் டைலாக்கின் முடிவில் அனைவரும் ஜெய் ஹிந்த் என்று கூறுகிறார்கள். சூர்யா மட்டும் ஜெய்ஹிந்த் சொல்ல மறுத்தது ஏன்? அவர் இந்தியன் இல்லையா? இந்தியா வாழ்க என்று சொல்வதில் பெருமையாக இல்லையா?