செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 25 ஜூலை 2024 (12:13 IST)

ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக மதன் கார்க்கி உருவாக்கியுள்ள ‘முடிவிலி’ ஆல்பம்!

தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியராகவும் வசனகர்த்தாவும் தனித்துவத்தோடு இயங்கி வருபவர் மதன் கார்க்கி. இவர் பாடல் ஆசிரியர் வைரமுத்துவின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது. எந்திரன் படத்துக்கு வசனம் எழுதியதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் மற்றும் ரஹ்மான் என முன்னணி இசையமைப்பாளர்களுக்கு பாடல் எழுதி இன்று முன்னணி பாடல் ஆசிரியராக இருக்கிறார். இந்நிலையில் இப்போது அவரே இசையமைத்து ‘முடிவிலி’ என்ற ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.

10 பாடல்கள் கொண்ட இந்த ஆல்பத்தின் பாடல் வரிகளை அவர் எழுத, ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இந்த ஆல்பம் நாளை முதல் ஸ்பாட்டிஃபை உள்ளிட்ட தளங்களில் வெளியாகவுள்ளது. இந்த பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலம் சார்ந்த காதல்களாக உருவாகியுள்ளதாக மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.