1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 3 ஜனவரி 2019 (15:34 IST)

அராத் ஆனந்தியின் அலப்பறையால் ரௌவடி பேபி செய்த சாதனை..!

மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள ரவுடி பேபி பாடல் வீடியோ யூடியூபில் அபார சாதனையை படைத்துவருகிறது. 


 
‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த மாதம் திரைக்கு வந்த படம் ‘மாரி 2’ . இந்த படத்தில்  தனுஷுக்கு  ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார் .
 
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில்  இடம் பெற்ற " ரவுடி பேபி " பாடல் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் இப்பாடலின் வீடியோ நேற்று இணையத்தில்  வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
தற்போது யூடியூப் ரெண்டிங்கில் இந்த பாடல் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. சற்றுமுன்வரை 4.9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அபார சாதனையை படைத்துள்ளது . இதன் மூலம் ரவுடி பேபி  சிம்டாங்காரன் பாடலின் சாதனையை முறியடித்துள்ளது என்பது கூடுதல் தகவல் . 
 
தனுஷ் எழுதி பாடியிருந்த ரவுடி பேபி பாடலுக்கு இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இந்த பாடல் இவ்வளவு சாதனை படைக்க அராத் ஆனந்தியின் நடனம் முக்கிய  பங்காக அமைந்துள்ளது என்கிறது சினிமா வட்டாரம்.