புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (11:32 IST)

மன்மத லீலை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி… தயாரிப்பாளர் போட்ட வைரல் ட்வீட்!

வெங்கட்பிரபு இயக்கியுள்ள மன்மத லீலை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ரிலீஸில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மாநாடு. இதனால் வெங்கட்பிரபு இப்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார். இதையடுத்து மாநாடு படத்தின் தாமதத்தால் ஏற்கனவே அசோக் செல்வனை வைத்து அவர் மன்மத லீலை என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். இந்த படம் ஏப்ரல் 1 ஆம் தேதி இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் வா கணக்கு என்ற பாடலின் லிரிக் வீடியோ ஆகியவை வெளியாகி இளைஞர்களைப் பெரிய அளவில் கவர்ந்துள்ளன. படத்துக்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்வமாக இளைஞர்கள் இந்த படத்தைப் பார்க்க சென்ற நிலையில் காலைக் காட்சி தொழில்நுட்பக் காரணங்களால் ஒளிபரப்பாகவில்லை. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்  வெளியிட்டுள்ள டிவீட்டில் ‘ தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிறு தாமதம். மேட்னி காட்சியில் இருந்து படம் திரையரங்குகளில் வெளியாகும்’ என அறிவித்துள்ளார்.