புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 23 மார்ச் 2022 (21:28 IST)

நாங்க கொண்டாட்ற மாதிரி படமே வராதா? பிரேம்ஜி அமரனின் ’மீம்’ லீலை!

நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் பகிர்ந்துள்ள மீம் ஒன்று இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

மாநாடு வெற்றிக்குப் பிறகு வெங்கட்பிரபுவின் அடுத்த படமாக மாநாடு திரைப்படம் உருவாகியுள்ளது. மாநாடு படத்தின் தாமதத்தால் ஏற்கனவே அசோக் செல்வனை வைத்து அவர் மன்மத லீலை படத்தை இயக்கி முடித்துவிட்டார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகி இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. படத்தின் பெயருக்கேற்றவாறு 18+ விஷயங்களை மிக அதிகமாகவே சேர்த்துள்ளாராம் வெங்கட் பிரபு.

படத்தின் கதாநாயகனின் வாழ்க்கையில் இருவேறு கால கட்டங்களில் நடக்கும் கதைக்களத்தை வைத்து உருவாக்கியுள்ளாராம். ஏற்கனவே வெளியான போஸ்டர்களும் டீசரும் இளைஞர்களைக் கவரும் விதமாக படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படம் பற்றி மன்மதலீலை படத்தின் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன் பகிர்ந்துள்ள மீம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. திரைப்படங்களின் வெற்றியை சொல்ல குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி, பெண்கள் கொண்டாடும் வெற்றி என்று சொல்லப்படுவது வழக்கம். அதை ட்ரோல் செய்யும் விதமாக இந்த மீமை பகிர்ந்துள்ளார் பிரேம்ஜி.