புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2017 (10:44 IST)

ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர்களும், ரசிகர்களும் பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் ரஜினிக்கு பல்வேறு அரசியல் கட்சியில் நண்பர்கள் இருப்பதால் அவருக்கு அரசியல் தலைவர்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
இந்த நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். நல்ல உடல்நலத்துடன் நீண்டநாள் வாழ வேண்டும் என ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து  தெரிவித்துள்ளார்.
 
ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.