செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2022 (08:52 IST)

வாரிசு செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், விரைவில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிக்கும் வாரிசு படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர்  படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே பாடல் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. அதே நேரத்தில் பாடல் முன்பே வெளியாக பழைய சினிமா பாடல்களின் மெட்டுகளில் அமைந்துள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள செகண்ட் சிங்கிள் பாடல் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.