திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 10 ஜூலை 2021 (16:14 IST)

திருமணத்துக்குப் பின் ரி எண்ட்ரி கொடுக்கும் ஸ்வாதி!

நடிகை ஸ்வாதி திருமணத்துக்குப் பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க உள்ளாராம்.

சுப்ரமண்யம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமாகியவர் ஸ்வாதி. அதன் பின்னர் அவர் சில படங்களில் நடித்தாலும், அந்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தரவில்லை. இப்போது வரை அவர் சுப்ரமண்யபுரம் ஸ்வாதி என்றுதான் அறியப்படுகிறார்.

இந்நிலையில் திருமணம் ஆன பின்னர் அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு சினிமாவில் இருந்து விலகினார். ஆனால் இப்போது அவர் மீண்டும் நடிக்கும் முடிவை எடுத்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறாராம்.